தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கொல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் பெனிக்ஸின் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெனிக்ஸ் பாசத்துடன் வளர்த்த நாய் கடைக்குள் அவரை தேடி வரும் காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் சிபியை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஜெயராஜ், பெனிக்ஸ் நடத்தி வந்த செல்போன் கடை நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. ஜெயராஜ், பெனிக்ஸ் பாசத்துடன் வளர்த்து வந்த நாய் ஒன்று கடைக்குள் சென்று இருவரையும் தேடி வருவது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.