நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள க/பெ ரணசிங்கத்தின் திரைப்படம் திரையரங்கு பாணியில் வெளியாக உள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதத்தின் இறுதி வரை கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், தமிழகத்தில் திரையரங்கு திறப்பதில் எந்த தளர்வும் அளிக்கப்படவில்லை.
இது திரையுலகை நம்பியுள்ள பிரபலங்கள், தொழிலாளர்கள், ரசிகர்கள் என பலருக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்களின் படங்கள் தொடர்ந்து OTT தளங்களில் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் OTT தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
இந்த திரைப்படம் திரையரங்குகள் பாணியில் காட்சிக்கு கட்டணம் என்ற முறையில் வெளியாக உள்ளது. இந்த பாணியில் வெளியாகும் முதல் தமிழ் படமாகவும் இது அமைந்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்கு பாணியில் இந்த திரைப்படம் திரையரங்கு பாணியில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.