Categories
சினிமா தமிழ் சினிமா

“RIP வடிவேல் பாலாஜி” பணம் இல்லாததால் உயிரிழந்தாரா….? கேள்விக்கு விடைதேடும் ரசிகர்கள்….!!

பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பல கேள்விகளுக்கு விடை தேடி வருகின்றனர்.

பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஆனந்த கண்ணீரை வரவழைத்த அவர், இன்று மரணமடைந்து மன வலியுடன் கூடிய சோக கண்ணீரை மக்களிடையே வரவழைத்துள்ளார். மாரடைப்பால், பக்கவாத நிலைக்கு தள்ளப்பட்ட இவர்,

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் கட்டணத் தொகையை செலுத்த முடியாத காரணத்தினால், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிரபலமானவராக இருந்தும் உடல்நிலை மோசமான நிலையில் யாரும் பண உதவி செய்யவில்லை என்பது கசப்பான உண்மையாக பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட பிரபலமாக இருக்கும் இவருக்கே இந்த நிலை என்றால்? இது என்ன வாழ்க்கை? பணம் இருந்தால் போதுமா ? எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாமா? மரணத்தையும் வென்றிருக்கலாமா?  பணம் தான் மனிதனுக்கு முழுமையான வாழ்க்கையா ?    என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தெரியாமல் ரசிகர்கள் பதில் தேடி வருகின்றனர். 

Categories

Tech |