Categories
மாநில செய்திகள்

13 மாவட்டம்… ரூ.110,00,00,000 மோசடி… சிக்கிய அரசு ஊழியர்கள்… 80பேர் நீக்கம் …!!

மத்திய அரசு விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் நிறைய திட்டங்களை வைத்துள்ளார்கள். அதில் புதிய செய்தி என்னவென்றால் பிரதம மந்திரியின் உழவர் நிதி திட்டத்தில் தமிழகத்தில் நடந்த ஊழல் முறைகேடு…. இது என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்

இதில் நடந்த முறைகேட்டால் சுமார் 110 கோடி ரூபாய் சுருட்டபட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றார்கள். இதில் விவசாயி அல்லாத சுமார் 5.5 லட்சம் பேர் விவசாயி என்ற போர்வையில் பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இந்த முறைகேடு,  ஊழல் நடந்திருக்கிறது. இதற்க்கு தொடர்புடைய 34 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், 80 ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரியின் உழவர் நிதி திட்டம் என்றால் என்ன ?

டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகம் செய்த இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூபாய் 6,000 கொடுக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஒரே தவணையாக இல்லாமல் 4 மாதத்திற்கு ஒருமுறை ரூபாய் 2000 என மூன்று தவணையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் போடப்படும்.

விவசாயிகள் இதில் எப்படி சேரலாம் ?

இதில் யார் விவசாயிகள் என்பதை மாநில அரசுதான் முடிவு செய்கின்றது. மாநில அரசு தான் அதற்கான அங்கீகாரத்தை கொடுக்கின்றது. மாநில அரசு பரிந்துரைக்கும் விவசாயிகளுக்கு உதவி தொகை கொடுக்கலாம்.

ஊழல் நடக்க காரணம் யார் ?

தமிழக அரசு கூறுவது என்னவென்றால் இந்த ஊழலுக்கு ஒரு முக்கிய காரணமாக மத்திய அரசு இந்த திட்ட விதிகளில் சமீபத்தில் கொண்டு வந்த ஒரு சில தளர்வுகள் தான் பார்க்கப்படுகின்றது. கடந்த 4 மாதங்களில் கொரோனா காலத்தில் ஆன்லைனில் விவசாயிகளை அப்ளை செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன் காரணமாக மாநில அரசின் வேளாண் துறை ஊழியர்கள் நேரடியாக களத்துக்கு சென்று இவர் விவசாயி தானா ? அவர்கள் கொடுத்திருக்கும் தகவல் சரிதானா ? என பார்க்க முடியவில்லை. எனவே இதுவும் ஒரு காரணம் என்று மாநில அரசு சொல்லி வருகிறார்கள்.

ஊழல் அரங்கேறியது எப்படி ?

அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகளின் பங்கு என்ன என்றால் யார் கிட்ட அந்த லாகின் பாஸ்வர்ட் இருக்கிறதோ அதனை அரசு அதிகாரி அந்த ஏஜெண்டிடம்  கொடுத்து விடுகின்றார். அந்த ஏஜென்ட் பாஸ்வேர்டு கொடுத்தால் சும்மா இருப்பாங்களா ? விவசாயி அல்லாதவர்களை தொடர்பு கொண்டு  கொரோனா காலத்தில் மத்திய அரசு நிதி கொடுக்கின்றார்கள். வருடத்திற்கு ரூ 6000கிடைக்கும் எங்களுக்கு ரூ 1,500  கொடுத்து விட வேண்டும் என்று கூறி விவசாயி அல்லாதவர்களை வைத்து மோசடி செய்கின்றார்கள். இப்படி ஆக ஊழல் நடைபெற்றுள்ளது. 5.5 லட்சம் பேர் முறைகேடாக சுமார் 110 கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |