ஹிந்தி திணிப்பு தொடர்பாக திமுகவினர் நேரடி விவாதத்துக்கு தயார் என தெரிவித்த பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையின் சவாலை திமுக மக்களவை உறுப்பினராக உள்ளார்.
அண்மையில் பாஜகவில் சேர்ந்து மாநில துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ஒரு பேட்டியில் திமுகவை கடுமையாக சாடினார். அப்போது நான் விவாதத்துக்கு வர ரெடி திமுக ரெடியா என்று சவால் விடுத்தார். மேலும் அவர் பேசும் போது, எங்களுக்கு தமிழ் முக்கியம், தமிழ் மக்கள் முக்கியம், தமிழ்நாடு முக்கியம் அதற்கு அப்புறம்தான் எல்லாம். தமிழ் மாணவர்களுக்கு எங்க அறிவு இல்லை..;. எல்லா விஷயத்துலயும் முன்னாடி இருக்கிறது தமிழ் மாணவன். எல்லா விஷயத்துலயும் முன்னேறி போயிட்டு இருக்கான்.
இன்னும் நீங்கள் மொழி அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் 2021ல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று சொல்லுங்கள். பிஜேபி கார்ப்பரேட் கட்சி என்று சொல்வதற்கு என்ன ஒரு தகுதி இருக்கு. நீட்டை வைத்துக்கொண்டு எதற்காக அரசியல் செய்கிறீர்கள் ? இப்போம் நான் சொல்கிறேன், என்னுடைய சவால்.. திமுக நேரடியாக விவாதத்துக்கு வந்தால் நான் ரெடி என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலையின் சவாலை திமுக தர்மபுரி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தித்திணிப்பு தொடர்பாக திமுகவை சேர்ந்த எவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என சவால் விடுத்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை அவருடன் நேரடியாக விவாதிக்க நான் தயார் என திமுக எம்.பி செந்தில் குமார் அவர் தெரிவித்துள்ளார்.