Categories
தேசிய செய்திகள்

ரியாவின் ஜாமின் மனு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை…!!

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கர போர்த்தி மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே. சிங்க் பிஹார்  போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ அமலாக்கத் துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய மூன்று முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, வித்தது தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தியின் தம்பி சோஃபிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல், வேலைக்காரர் தீப சாவந்த்   உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கு  தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நடிகை ரியாவிடம் மூன்று நாட்களாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நடிகை ரியா போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு  கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறைச்சாலையில் நடிகை ரியா அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

Categories

Tech |