மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் தங்களின் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும்.
சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாகும். ஒருசில உறவின் எதிர்பார்ப்புகள் வேதனை தருவதாக இருக்கும். நீங்கள் வணிகத்தில் சில புதிய வாய்ப்புகளைப் பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கல்வி மற்றும் போட்டிக்கான முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும் விதத்தில் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.