Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரியபாளையம்  அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

 முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்  அருகேயுள்ள  முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. காலை 7 மணிக்கு தமிழகம முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தற்போது வரை முக்கரம்பாக்கம் பகுதி வாக்குச்சாவடியில் தொடங்காததால் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்து கொண்டு இருக்கின்றனர்.

Categories

Tech |