திபெத் வீரரின் இறுதி சடங்கில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
லடாக்கின் தெற்கு பியாங்காக் பகுதியில் எஸ்எஸ்எப் என்ற சிறப்பு எல்லைப்படை பிரிவை சார்ந்த நைமா டென்சின் என்ற இலக்கிய வீரர் கண்ணிவெடி வெடித்ததில் கடந்த வாரம் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வீரரின் இறுதி சடங்கு நேற்று லடாக்கின் லே என்ற பகுதியில் நடந்தது. அந்த இறுதி சடங்கில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் திபெத்திய சமூகத்தினர் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அதில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் பங்கேற்று புயல் அந்த வீரரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சில நாட்களாக கிழக்கு லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் திபெத் சிறப்பு பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் இறுதி சடங்கில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லையை பாது காப்பதில் இந்தியாவிற்கு உறுதுணையாக இருப்பதை சீனாவிற்கு உணர்த்தும் வகையில் இறுதி சடங்கில் பாஜக மூத்த தலைவர் பங்கேற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.