உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது கடந்த ஐந்து மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால் மூடப் பட்டிருப்பதால் சுற்றுலாத் துறைக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தரவுகளை அறிவித்து வருகின்றன. அவ்வகையில் தாஜ்மஹால் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை திறக்கப்படும் என்று கூறியுள்ள மத்திய அரசு அதில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்திருக்கிறது. தாஜ்மஹாலில் தினம்தோறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி தாஜ்மஹால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே வினியோகம் செய்யப்படும் என்றும் தாஜ்மஹால் செல்லும் பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.