போலீஸ் காவலில் இருந்த கருப்பினத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததால் அமெரிக்காவில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டேனியல் புரூடி என்பவர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் கடந்த வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணி நடந்தது. அந்தப் பேரணி நீதிமன்ற வீதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். சட்டவிரோதமாக கூடுவதை தவிர்த்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். போராட்டக்காரர்கள் அதனை கேட்டு கலைந்து செல்லாததால், அவர்களை விரட்டுவதற்கு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு வரை போராட்டம் தொடர்ந்து நடந்தது. போலீசாரால் கொல்லப்பட்ட கருப்பு இனத்தை சேர்ந்தவர் இன் வீடியோ பதிவுகளை அவரின் குடும்பத்தினர் இந்த வாரம் வெளியிட்டுள்ளதால், போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் நிலை உண்டாகி உள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரம் இறுதியில் நடந்த தொழிலாளர் தின கொண்டாட்டத்தின்போது நிறவெறி மற்றும் போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் திரும்பவும் வலுப்பெற தொடங்கியுள்ளன.