Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்கம் சூப்பர்…. முடிவு சுமார்…. ஹைதராபாத்துக்கு 133 ரன்கள் இலக்கு …!!

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 132 ரன்கள் குவித்துள்ளது 

ஐ.பி.எல் 33 வது லீக் போட்டியில் சின்ன தல ரெய்னா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி   ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. தோனி விளையாடாததால் அவருக்கு பதில் சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். அதனால் சென்னை அணியின் கேப்டனாக ரெய்னா வழி நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டாஸ் வென்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா பேட்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டு பிளெசியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். ஒருபுறம் வாட்சன் பொறுமையாக விளையாட மறுபுறம் டு பிளெசி அதிரடியாக விளையாடினார். அதன் பின் நதீம் பந்து வீச்சில் வாட்சன் 31 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து பாப் டு பிளெசியும் 45 (31) ரன்களில் விஜய் சங்கர் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து  14வது ஓவரில் ரஷித் கான் சுழலில் ரெய்னா 13, கேதார் ஜாதவ் 1 என ஒரே ஓவரில் விக்கெட்டை பறி கொடுத்தனர். அதன் பிறகு எதிர்பார்ப்பில் களமிறங்கிய சாம் பில்லிங்ஸும்  0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பொறுமையாக விளையாடிய அம்பத்தி ராயுடு 25* (21) ரன்களும் , ஜடேஜா 10* (20) ரன்களும் எடுதனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 132 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது, நதீம், விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 133 ரன்கள் இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Categories

Tech |