கொரோனா வைரஸ் மனித குலத்தை அழிக்க கூடிய கொடிய நோய் அல்ல என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பற்றி சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கூறுகையில், ” நோய் எக்ஸ் மனித குலத்திற்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள். அது மட்டுமன்றி இது அதிக அளவிலான நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய அறியப்படாத நோய்க்கிருமிகளை கொண்டது என்று 2018 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு உறுதியாக ஏற்றுக்கொண்டது. கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கியபோது, நோய் எக்ஸ் உலகில் வந்துவிட்டதோ என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன.
ஆனால் கொரோனா ஒரு உலக பேரிடர் மட்டுமே இன்றி நோய் எக்ஸ் கிடையாது. கொரோனா உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் ஒரு கொடிய வைரஸ் என்றாலும், அது மனித குலத்தை முழுவதுமாக அளிக்கக் கூடிய கொடிய நோய் கிடையாது. எதிர்கால தொற்று நோய்களை எதிர் கொள்வதற்கு தற்போதைய நெருக்கடி நிலையின் பாடங்களை அனைவரும் ஆவணப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.