மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட். அதிலும், அந்த கண்ண பார்த்தாகா பாடல் காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடலாக அமைந்துள்ளது. பலரது செல்போன்களில் காலர் டியூன், ரிங்டோனாக இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த பாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை மாளவிகா மோகனன், நாய் ஒன்று அந்த பாடலை பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு நாயும் உங்கள் பாடலை ரசிக்கிறது அனிருத். நமக்கு எல்லா தரப்பு ஒப்புதலும் வேண்டும் என கூறியுள்ளார்.