Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாய் திட்டியதால்….. விஷம் குடித்து தற்கொலை….. 10ஆம் வகுப்பு மாணவி மரணம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அருகே எட்டி யாம்பட்டி என்ற பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருடைய 15 வயது மகள் ஜெயந்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தற்போது பதினொன்றாம் வகுப்பு படிக்க உள்ளார். இந்நிலையில் ஜெயந்தியின் தாய் பழனியம்மாள் அவரை கடுமையாக திட்டியுள்ளார்.

அதனால் மனமுடைந்த ஜெயந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு ஜெயந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஜெயந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி பாப்பாரப்பட்டி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |