சட்டப்பேரவைக் குழு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க இருப்பதால் அங்கு ஆயத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து வருகின்ற 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கலைவாணர் அரங்கத்தின் மூன்றாம் தளத்தில் 12,000 சதுரஅடி பரப்பளவில் பேரவைக் கூட்டத்திற்கான அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்சியின் எம்எல்ஏக்கள் அமர, 6 அடி இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.
சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் போன்றோர் வருவதற்கு தனிப்பாதையும், சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கலைவாணர் அரங்கில் முதலமைச்சருக்கான பிரத்யேக அலுவலகமும், அறையும் மூன்றாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய தொடர்ந்து, 2ஆம் தளத்தில் துணை முதலமைச்சர் உள்ளிட்டோருக்கும், முதல் தளத்தில் சட்டப்பேரவை தலைவர் உள்ளிட்டோருக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் எதிர்க்கட்சித்தலைவர்களுக்கான அறைகள் இடம்பெற்றுள்ளன.