மெக்சிகோவில் நடந்த இறுதி சடங்கில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் மோரேலஸ் நகருக்கு அருகே இருக்கின்ற குர்னாவாக்கா என்ற நகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியுடன் இறுதி சடங்கில் நுழைந்ததால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைப் போலவே அண்ணா நகரில் கடந்த மாதம் வீதியில் மது அருந்தி கொண்டிருந்த ஆறு இளைஞர்களை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.