Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

OTT தளத்தில் படம் வெளியிட்டால்….. எங்கள் இனமே அழிந்திடும்…..TNFDF தகவல்….!!

OTT  தளங்களில் படங்களை வெளியிடுவது விநியோகஸ்தர்கள் என்ற இனத்தையே அழித்து விடும் என விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டு வருவதால், பல துறைகள்  நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், திரையுலகமும் தற்போது  நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

ஊரடங்கில்  பல தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டாலும்,  தியேட்டர்கள் திறக்காததால் பிரபல ஹீரோக்கள் நடித்து வெளியாக உள்ள திரைப்படங்கள் அனைத்தும் OTT யில்  படிப்படியாக வெளியாக உள்ளது. இந்நிலையில்,  ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால், OTT தளத்தில் படங்களை வெளியிடுவது விநியோகிஸ்தர் என்ற இனத்தையே அழித்து விடும் என தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது. மேலும் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை OTT  தளத்தினர்  வாங்குவார்களா ? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

Categories

Tech |