தனியாக வாகனத்தில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டு பல கட்டுப்பாடுகளுடன் சில மாதங்களுக்கு முன்பு வரை மக்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வுகளாக மாறி மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் இந்த சூழ்நிலையில்,
சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முகக்கவசம் வீட்டை விட்டு வெளியேறியதும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய விதிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வாகனத்தில் தனியாக செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டுமா? என்ற கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,
கொரோனா தடுப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், மக்கள் மாஸ்க் அணிவதாகவும், தனியாக செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும் என்பது வழிகாட்டு நெறிமுறைகளில் இல்லை என்றாலும், தொடர்ந்து வாகனத்தில் செல்லும்போது மாஸ்க்கால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால், அணிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிக்னல் அல்லது மக்கள் இருக்கும் இடங்களில் வாகனங்களை நிறுத்தி நிற்கும் பட்சத்தில் உடனடியாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.