வளர்ப்பு மகளை 2 ஆண்டுகளாக தந்தை, அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே பாறைப்பட்டியில் வசித்துவரும் ஒரு தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னதாக உறவினர் மகளைத் தத்தெடுத்து சொந்த மகளாக வளர்த்து வந்துள்ளனர்.. இதற்கிடையே தான் தத்தெடுத்து வளர்த்து வந்த 11 வயது மகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ப்பு அப்பாவான விருதுநகரில் இரும்புக்கடை நடத்தி வரும் 54 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார்.. அதுமட்டுமில்லாமல் அவரது அண்ணன் மகனும் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார்..
மேலும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் இருவரும் மிரட்டி இந்த கொடூரத்தை செய்து வந்துள்ளனர்.. இந்த சூழலில் தான் நீண்ட நாட்களாக சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மகளிடம் தாய் கேட்டபோது, தனக்கு நடந்த கொடுமையை கூறி அழுதுள்ளார்.. இதனைத் தொடர்ந்து சிறுமியின் வளர்ப்பு தாய் போலீசில் புகார் கொடுத்தார்..
புகாரின் அடிப்படையில் வளர்ப்பு தந்தை மற்றும் அவரது அண்ணன் மகன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து விருதுநகர் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. பாதுகாவலனாக இருக்க வேண்டிய அப்பாவும், அண்ணனுமே சிறுமியை பல நாட்களாக சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..