புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை பகுதி அருகே வசித்து வருபவர் செல்லையா. இவருக்கு வயது 70. இவரது மகள் சாந்தி. இவருக்கு வயது 40. நீண்ட வருடங்களாக தனது மகள் சாந்திக்கு திருமணம் செய்து வைக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார் செல்லையா. ஆனால் மகள் சாந்தி மாற்றுத்திறனாளி என்பதாலும், மீறி அவரை பெண் கேட்பவர்கள் அதிக வரதட்சணை கேட்டு வந்ததாலும் மகளை திருமணம் செய்து வைக்க முடியாமல் தவித்து வந்துள்ளார் செல்லையா.
இந்நிலையில் தமக்கும் வயதாகிக் கொண்டே செல்கிறது வருங்காலத்தில் நமக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், மகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற அச்சத்தில், ஆம்லெட்டில் விஷம் கலந்து கொடுத்து மாற்றுத்திறனாளி மகளை கொன்றுவிட்டு தந்தை செல்லையாவும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.