உலகம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா மட்டும் பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் பிரேசிலில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும், அமெரிக்காவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை உலகம் முழுவதிலும் 2,61,69,212 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உறுதி செய்யப்பட்டு வர்களின் 68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களின் 60,705 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து 1,80,00,000 மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.