Categories
தேசிய செய்திகள்

வினோதமாக மது பாட்டில்களை கடத்திய இருவர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு 101 மதுபாட்டில்களை உடலில் கட்டி கடத்தி சென்ற இரண்டு பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோலாவரம் மேற்கு  சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் இருவரின் செயல்பாடுகளும் சந்தேகத்திற்கு இடம் அளித்ததால் சட்டையை கழற்றுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

அப்போதுதான் உடலில் மதுபாட்டில்களை அவர்கள் டேப் போட்டு ஒட்டி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 101 மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்களை அவர்கள் வாங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |