கொரோனாவிடமிருந்து ஐபிஎல் வீரர்களை பாதுகாக்க பிசிசிஐ முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டி இந்தியாவில் நடத்த சாத்தியமில்லை என்பது தெரிய வரவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து போட்டியை நடத்த திட்டமிட்டது. இதன்படி,
வீரர்கள் போட்டியில் பங்கேற்க தங்களை தீவிரமாக ஆயத்தப்படுத்தி வருகின்றனர். இதன்படி, ஐபிஎல் தொடரில் விளையாட துபாய் சென்ற சென்னை அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீரர்கள் மீதான கண்காணிப்பு தீவிரம் ஆகியுள்ள நிலையில், அனைத்து வீரர்களுக்கும் மின்னணு கண்காணிப்பு பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்மூலம் வீரர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.