Categories
உலக செய்திகள்

பேருந்து நிலையத்தில்… பெண்கள் மட்டுமே குறி… மிக மோசமாக நடந்து கொண்ட கொடூரன்..!!

லண்டனில் பேருந்து நிலையத்தில் இருக்கும் பெண்கள் முன் மிகவும் மோசமாக நடந்து கொண்ட  ஒருவருக்கு நீதிபதிகள் தண்டனை விதித்துள்ளனர்.

தெற்கு லண்டனில் இருக்கும் பிரிஸ்ட்டான் டியூப் பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்களை நோக்கி லெஸ்லி என்ற நபர் செல்வார். அதன்பிறகு தான் அணிந்திருக்கும் உடைகளை கலைந்து மிகவும் மோசமான செயல்களை அப்பெண்கள் முன்பு செய்து வந்துள்ளார். இதனால் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சென்ற வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து கடந்த மே மாதம் வரை அந்த நபர் இத்தகைய அருவருப்பான செயலை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து காவல் அதிகாரிகள் லெஸ்லி-னை  தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர்மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதிகள் அவருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். அதோடு நீதிபதி கூறுகையில் லெஸ்லி ஆபத்தான நபர் என்ற முத்திரை குத்தப்படுகின்றார். இவர் ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் தவறாக நடந்த வழக்கில் தண்டனை அனுபவித்தவர் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |