Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு – அடுத்த மரணம்” ஒன்னும் புரியல அப்பா…. மாணவனின் விபரீத முடிவு…!!

ஆன்லைன் வகுப்பு புரியாமல் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்கிரபாண்டி. இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கொரோனா  பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆன்லைன் மூலம் தனது வகுப்புகளை படித்து வந்தார். இந்நிலையில் விக்கிரபாண்டி தனது தந்தை இளங்கோவனிடம் தனக்கு ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என கூறியுள்ளார். அதற்கு இளங்கோவன் விக்கிரபாண்டியை  கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த விக்கிரபாண்டி இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட பெற்றோர்கள் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் விக்கிரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் இதே போன்று ஆன்லைன் வகுப்பு புரியாமல் ஒரு  மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |