Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் அத்துமீறி விட்டதாக சீனா அலறல்…!!

சீனாவை முந்தி கொண்டு பாங்காங்சோ ஏரிக்கரையில் உள்ள முக்கிய மலைச் சிகரத்தை இந்திய ராணுவம் தன்வசப்படுத்தியதை தொடர்ந்து, இந்தியா அத்துமீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா சீனா படைப்பிரிவு தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பாங்காங்சோ ஏரிக்கரை மலைச்சிகரங்களில் சீன ராணுவம் கேமரா மற்றும் உளவு பார்க்கும் கருவிகளை அமைத்திருந்தது. சீனாவின் உளவுகருவிகளை கடந்து சென்ற இந்திய ராணுவத்தினர், சீனா கைப்பற்ற திட்டமிட்டிருந்த பாங்காங்சோ ஏரிக்கரை தென்கரையில் உள்ள மலை சிகரத்தை கைப்பற்றினர்.

இராணுவத்தின் சீக்கிய பிரிவும், சிறப்புப் பிரிவும் சேர்ந்து ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிகரத்தை கைப்பற்றியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த சீனா, இந்திய ராணுவம் அத்துமீறியதாக குற்றம்சாட்டி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா படைப்பிரிவு தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனிடையே இந்திய-சீன எல்லைப் விகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Categories

Tech |