Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தயாரிப்பாளர் சங்க வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி…!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்த ஏதுவாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை சார்பில் தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான பிரிமியம் தொகையை செலுத்தவில்லை எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளிக்கக் கோரி தயாரிப்பாளர்கள் சோலையன்,   குரு சங்கர், ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி பி. டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் திரைப்பட  தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரிமியம் தொகையை செலுத்த ஏதுவாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |