Categories
தேசிய செய்திகள்

கல்லூரி தரவரிசை பட்டியல்…. முதலில் ஷின்சான் பெயர்…. என்ன படிப்புக்கு தெரியுமா…?

பிஎஸ்சி படிப்புக்கான தர வரிசைப் பட்டியலில் ஷின்சான் பெயர் இடம்பெற்றுள்ளது 

கொரோனா பரவலினால் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இருக்கும் சிலிகுரியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி தரவரிசைப் பட்டியலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி பார்க்கப்படும் கார்ட்டூன்களில் ஒன்றான ஷின்சான் நேஹாராவின் கதாநாயகன் ஷின்சானின் பெயர் முதலில் இடம்பெற்றிருப்பதாக கல்லூரி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பெயர் பதிவு செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே அகற்ற பட்டதாகவும், இத்தகைய செயல் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக வேறு சில கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் நேகா காகரின் மற்றும் சன்னி லியோன் போன்றவர்களின் பெயர்கள் இடம் பிடித்து பெரும் சர்ச்சை உருவானது. அவர்களும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தவறான தகவல்களை கொடுப்பது குறித்து சைபர் கிரைம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Categories

Tech |