Categories
அரசியல்

அதிமுக, திமுக தான் வரணுமா…..? கேள்விகளை அடுக்கிய பிரேமலதா விஜயகாந்த்…!!

அதிமுக அல்லது திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டுமா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாட்டு மக்கள் மாற்று அரசியலை தற்போது புரிந்து வருகின்றனர் என தெரிவித்தார். அதோடு அதிமுக, திமுகவே தான் தொடர்ந்து ஆட்சிக்கு வர வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு  மாற்று அரசியலுக்கான சவாலை ஏற்க போவது யார்? என்றும் பூனைக்கு மணி கட்டப் போவது யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது தேமுதிக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கின்றது.

எட்டு மாதத்தில் சட்டப்பேரவை ஆட்சி முடிவடைவதால் காட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. ஏற்கனவே பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று பாஜக தெரிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, அதிமுக தலைமையில்தான் கூட்டணி என உறுதியாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் கருத்துக்கள் தேமுதிக அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்பும் விதத்தில் அமையப் பெற்றுள்ளது.

Categories

Tech |