Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னைக்கு போனா… “இனி இது கட்டாயம் கிடையாது”… மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு..!!

வேறு  மாநிலத்தில் இருந்து சென்னை வந்தாலும் தனிமைப்படுத்தல் என்பது இனி கிடையாது என்று சென்னை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்திருக்கும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் மாவட்டங்களுக்கிடையேயான பொது போக்குவரத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முன்னால் ஒரு மாவட்டங்களிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது தனிமைப் படுத்துதல் என்பது அவசியமான ஒன்றாக இருந்து வந்தது. தற்பொழுது அதிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது  வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து முக்கியமாக சென்னை வருபவர்கள் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,” கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள், இல்லையென்றால் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் சென்னையில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |