வாலிபர் ஒருவர் திருமணம் ஆகவில்லை என ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலில் உள்ள கோட்டுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(26) என்பவர் அவரது தாயார் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். வெல்டிங் தொழில் செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று முந்தினம் அவர் நண்பர்களுடன் ஜிஎஸ்டி களத்தில் மது அருந்தியுள்ளார். அதன்பின் தனது நண்பர்களை முன்னால் செல்லும் படியும் தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார்.
வெகு நேரமாகியும் மணிகண்டன் வராததால் அவரது நண்பர்கள் மது அருந்திய இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டன் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோட்டுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் “அவருக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது”. இது தொடர்பாக மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.