Categories
தேசிய செய்திகள்

மாணவர்களிடம்… “அதிக காசு வாங்குனா”… இதுதான் நடக்கும்… டெல்லி அரசு எச்சரிக்கை…!

டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படும் பொழுது அதிகமான கட்டணம் வசூலிக்கக் கூடாது என கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நீடித்து வரும் நிலையிலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி அரசு ஏற்கனவே பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக தொகை வசூலிக்காமல் சிறப்பான பாடங்களை வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது.

அதாவது, டெல்லியில் உள்ள சில தனியார் பள்ளிகள் கொரானாவுக்கு பின் திறக்கப்படும் போது, கல்விக்கட்டணம், வருடாந்திரக் கட்டணம், மேம்பாட்டுக் கட்டணம் போன்றவற்றை வசூலிக்கப்போவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பொதுமுடக்கம் நீடித்து வரும் நிலையில் லாபத்தை எதிர்பார்க்காமல் கல்வியை கொடுக்குமாறும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |