Categories
உலக செய்திகள்

தூங்கி எழுந்த பெண்…. “வயித்துல ஏதோ நெளியுது” பரிசோதனையில் கிடைத்த அதிர்ச்சி….!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வாய் வழியாக பாம்பு வயிற்றுக்குள் நுழைந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் அமைந்துள்ள லவாசி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நன்றாக தூங்கி எழுந்துள்ளார். அதன் பிறகு அவரது வயிற்றுக்குள் ஏதோ ஒன்று நெளிவது போன்று உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றின் உள்ளே ஏதோ சென்று உள்ளது என உறுதி செய்து கொண்டனர். பின்னர் எண்டோஸ்கோப் என்ற கருவியை வாய் வழியாகச் செலுத்தி வயிற்றில் இருந்த பொருளை வெளியே கொண்டு வந்தனர்.

நீளமாக ஏதோ ஒன்று வர, முதலில் அது என்ன என்று புரிந்து கொள்ளாத பெண் மருத்துவர் பின்பு வெளியில் எடுக்கப்படுவது நான்கு அடி நீளம் கொண்ட பாம்பு என்பதை தெரிந்ததும் பதறியடித்து பின்வாங்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த அறையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட அனைவரும் பாம்பைக் பார்த்ததும் அச்சத்தில் சத்தமிட்டுள்ளனர்.

Categories

Tech |