பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் 31 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.
பெங்களூரு அணி களமிறங்கும் வீரர்கள்
மும்பை அணி களமிறங்கும் வீரர்கள்