Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடும்பத் தகராறு – குழந்தையை எரித்துக் கொன்ற தந்தை…!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒன்றரை வயது குழந்தையை எறித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை நாகநாதன் பகுதியைச் சேர்ந்த முனியசாமி-மதி அதிஷ்டா தம்பதிக்கு ஒன்றரை வயதில் அபினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 28ம் தேதி உறவினரின் திருமணத்திற்காக சென்றபோது தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் முனியசாமி குழந்தையை தாயிடம் இருந்து பறித்துக்கொண்டு வீடு திரும்பினார். மது போதையில் இருந்த அவர் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு தனது தங்கை வீட்டுக்கு திரும்பியுள்ளார். குழந்தை முனியசாமியிடம் இல்லாதது குறித்து அவரது தங்கை மதிஅதிஷ்டாவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த மதிஅதிஷ்டா காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குழந்தையை அடித்துக் கொன்றதை முனியசாமி ஒப்புக்கொண்டார். அவரது தகவலின்படி குழந்தையின் எரிந்த உடலை மீட்ட காவல்துறையினர் முனியசாமியையும் கைது செய்தனர்.

Categories

Tech |