ஒப்பந்தத்தை மீறி சீனா படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய சீனா எல்லைப்பகுதியில் 29ஆம் தேதி இரவிலே சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறல் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு புறம் எல்லைப் பிரச்சினையை தீர்க்கவேண்டும், பதட்டம் இருக்கக்கூடாது என பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிற சமயத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் ஏற்கனவே நாங்கள் பின்வாங்கிச் சென்று விடுவோம் என்று சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஓத்துக் கொண்டிருந்தாலும், அப்படி செய்யாமல் மீண்டும் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சொல்லப்படுகின்றது.
குறிப்பாக பாங்காங் ஏரி பகுதியில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்திய இராணுவத்தை சேர்ந்தவர்கள் – சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டபோது எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை சீனா இன்னும் வெளியிடவில்லை. ஆனால் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ..சீனா உயிரிழப்பு நிச்சயமாக அதிக எண்ணிக்கையாக இருக்கும். 37 ஸ்டெச்சர் கொண்டு சென்றதை பார்த்தோம் என்று சொல்லியிருந்தார்கள்.
சூழ்நிலையிலே இணையதளத்தில் இது குறித்த சில தகவல்கள் வெளிவந்து இருப்பதாகவும், சீனா ராணுவ வீரர்களின் பல கல்லறைகள் ஒரே இடத்தில் இருப்பதாகவும், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் ஒரே இடத்தில் இருப்பதாகவும் அதில் லே – லடாக் எல்லையில் உயிரிழந்தவர்களின் அடக்கம் என்று எழுதியுள்ளதாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனால் சீனா உயிரிழப்பு அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருக்கலாம் என்றும் தகவல் தெரிவித்திருக்கிறன.
இதன் காரணமாக தற்போது திசைதிருப்பல் நடவடிக்கையாக மீண்டும் இதுபோன்ற அத்து மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று கருதப்படுகிறது. ஆகவேதான் இந்திய இராணுவத்தை சேர்ந்தவர்கள் அந்தப் பகுதியிலே என்ன நடக்கிறது ? என்பதை உற்று நோக்கி கொண்டிருக்கிறார்கள். தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள், தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கையும் அந்த பகுதியில் அதிகரிக்கப்பட்டு தற்போது பேச்சுவார்த்தை நடப்பதாகவும், எல்லைபுற இராணுவக் குழுக்களின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது. லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் ஈடுபட்டிருப்பதால் தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது.