Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த தோசை செய்து பாருங்க… சுவையோ பிரமாதம்… பலனோ ஏராளம்…!!

சுக்கு தோசை 

தேவையான பொருட்கள் 

  • பச்சரிசி                             – 2 கப்
  • புழுங்கல் அரிசி             – 2 கப்
  • தயிர்                                    – 2 கப்
  • சீரகத்தூள்                         – 4 ஸ்பூன்
  • சுக்குத்தூள்                       – 4 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு           – 2 கப்
  • மிளகு                                   – 4 ஸ்பூன்
  • உப்பு                                    – தேவைக்கேற்ப

செய்முறை 

உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை 4 மணி நேரம் நன்றாக ஊற வைத்து அரைத்து மாவாக எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் மாவுடன் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

தோசை சுடும் நேரத்தில் மிளகு, சுக்கு தூள், சீரகத் தூள் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து விடவும்.

சுவையான சுக்கு தோசை தயார்.

நன்மைகள்

சுக்கு தோசை சாப்பிடுவதனால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைவதோடு சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு தீர்வு கொடுக்கும்.

Categories

Tech |