வேலை செய்யவில்லை என்றாலும் ஊதியம் வழங்கப்படும் என்ற புதிய திட்டம் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஜெர்மனியில் இருக்கும் MY BASIC INCOME எனும் தொண்டு நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1,200 யூரோக்கள் விதம் மூன்று வருடங்களுக்கு வேலை செய்யாமல் இலவசமாக வாங்க முடியும். ஆனால் இந்த மூன்று வருட காலத்தில் இணையதளம் மூலம் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது அவசியம்.
பணம் சம்பாதிப்பதற்கான அழுத்தம் இல்லாவிட்டால் புதுமையான எண்ணங்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இத்திட்டத்தை அறிவித்தவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதோடு வேலை செய்யாமல் ஊதியம் பெறுபவர்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான முடிவு எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளது