ஆரோக்கியம் நிறைந்த நட்ஸ் வகைகளில் முக்கியப் பங்கு வகிப்பது பாதாம்பருப்பு. எனவே இதனை அதிக அளவு மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். பாதாம் பருப்பில் பொட்டாசியம், புரதம், மெக்னீசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் ஈ உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை அனைத்தும் நமது சருமத்தை பாதுகாப்பாக வைப்பதற்கும் இதய நோய்கள் மற்றும் புற்று நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் உதவிபுரிகிறது. ஆனாலும் இத்தகைய சிறப்பு மிக்க பாதாம்பருப்பு சில தீமைகளையும் விளைவிக்கக் கூடியதாகவே உள்ளது இதனால் யார் யாரெல்லாம் பாதாம்பருப்பு சாப்பிடக்கூடாது என வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- ரத்த அழுத்தம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்றவற்றிற்கு சிகிச்சை எடுத்து வருபவராக இருந்தால் பாதாம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- இயற்கையாகவே பாதாமில் மாங்கனீசு அதிகளவு இருப்பதால் அளவுக்கு அதிகமாக பாதாம் பருப்பு சாப்பிடுவது போதைபொருள் உபயோகப்படுத்திய உணர்வை கொடுக்கும்.
- நட்ஸ் சாப்பிட்டால் ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்கள் பாதாம் பருப்பை சாப்பிட்டால் படை நோய், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
- குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதாம்பருப்பை விழுங்க சிரமப்பட்டால் அவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
- பாதாம்பருப்பு சாப்பிடுவதனால் மூச்சுத்திணறல் போன்றவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.