Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவை விரட்ட…. நான் இதை தான் செய்தேன்….. ஜெனிலியா ஓபன் ட்விட்….!!

நடிகை ஜெனிலியா தான் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  தற்போது இந்தியாவில் இதனுடைய மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ்  சாதாரண அப்பாவி ஏழை மக்கள், பணக்காரர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து வகையினரையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. அந்த வரிசையில்,

நடிகை ஜெனிலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் தொற்றிலிருந்து மீண்டு விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  அதில், மூன்று வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21 நாட்கள் தனிமையில் இருந்தேன். நேற்று நெகட்டிவ் என வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனாவை சமாளிக்க அல்லது  வந்தபின் விரட்ட நன்றாக சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள். இந்த நோயை எதிர்த்து போராட இது மட்டுமே சிறந்த வழி என கூறியுள்ளார். 

Categories

Tech |