Categories
தேசிய செய்திகள்

லைக் மோகத்தால்…. ரூ1,20,988 மதிப்பிலான பைக்கை இழந்த வாலிபர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

பிரபலமாக ஆசைப்பட்டு விலையுயர்ந்த புதிய பைக்கை இழந்த வடமாநில இளைஞர்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

வடமாநில இளைஞர்கள் இருவர் யூடியூபில் பிரபலமாக புதிய பல்சர் பைக்கை தீ பற்ற வைத்து பயணம் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. அவர்கள் பைக் சக்கரத்தில் சுற்றப்பட்ட துணியில், பெட்ரோலை ஊற்றி இத்தகைய சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். துணியில் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்த சில மணி நேரங்களில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கி பைக் முழுவதும் பற்றிக்கொண்டது.

சில மீட்டர் தூரம் கூட நகலாத பைக்கிலிருந்து இரண்டு இளைஞர்களும் துள்ளி குதித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் அதில் பதிவாகி உள்ளன. மேலும் பைக்கை கீழே போட்டு விட்டு ஒரு வாளியில் வைத்திருந்த சிறிதளவு தண்ணீரை அதில் ஊற்றி தீயை அணைக்க பார்த்தனர்.

ஆனால் தீ அணையவில்லை. இறுதியாக பைக்கில் பெரும் பகுதி எரிந்து சேதமானது தான் மிச்சம். இது குறித்து கருத்து பதிவிட்டு வரும் சமூக ஆர்வலர்கள் சிலர், பொருட்சேதம் மட்டுமே உயிர் சேதம் நல்வாய்ப்பாக இல்லை. இதுபோன்ற ஆபத்தான சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

 

Categories

Tech |