பெரியகுளம் அருகே உள்ள வாகன சோதனை சாவடியில் காவல்துறையின் வசூல் வேட்டை குறித்து வாகன ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே, மாவட்ட எல்லையான காற்றோடு அருகே உள்ளது வாகன சோதனை சாவடி. இந்த சோதனை சாவடி தற்போது காவல்துறையினரின் கட்டாய வசூல் செய்யும் கட்டண வசூல் மையமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம், சரக்கு ஏற்றும் வாகனம், காய்கறி வண்டி உள்ளிட்ட வாகனங்களை மறித்து கட்டாயமாக பணம் கொடுத்து தான் செல்ல வேண்டும் என்றும் இல்லையென்றால் காய்கறிகளாவது கொடுத்துச் செல்லுங்கள் என கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு கட்டாய வசூலில் ஈடுபடும் காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.