வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயிகள் அரசிடம் வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, வைகை அணையில் நாளை முதல் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது நாளொன்றுக்கு 900 கன அடி வீதம், 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு, மொத்தம் 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து,739 கன அடி தண்ணீரினை 31-ம் தேதி முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.