ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டவரிடம் 55 லட்சத்துக்கு கள்ள நோட்டு கொடுத்து மோசடி செய்த நபரை கோவையில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையை சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் அதிபர் மனைவியான ஜெனிஃபரிடம் கோவையை சேர்ந்த ஆச்சரியார் என்பவர் ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை ஆவணத் தொகையாக கொடுத்துள்ளார். முதல் தவணையாக ஆச்சாரியா கொடுத்த 55 லட்சம் ரூபாயை ஜெனிஃபர் பார்த்தபோது கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெனிபர் அவிநாசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் மோசடி நபரான ஆச்சரியாவை கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் நேற்று பிற்பகல் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாயையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது செம்மரக்கடத்தல் வழக்கு மோசடி வழக்கு இருப்பதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர் ஆச்சரியாவை அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.