தமிழக அரசு 4 மாவட்ட ஆட்சியரை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்ட கலெக்டர் களை இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை மாநகராட்சி ஆணையர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இடமாற்றம் செய்வது குறித்த அறிக்கையில், கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார் என்பவர் ஜடாவத் வேளாண்துறை துணை செயலாளராக மாற்றம் செய்யப்பட உள்ளார்.
மேலும் அவரது இடத்திற்கு பதிலாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகவும், அவரது இடத்தை பூர்த்தி செய்வதற்காக பழனி கோவில் நிர்வாக அதிகாரி ஜெயசந்திரபானு ரெட்டி நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.