Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 நாட்கள் முடிஞ்சிட்டு… யாருக்கும் கொரோனா இல்ல… பயிற்சியை தொடங்கிய ‘கிங் கோலி’ டீம்..!!

தனிமைப் படுத்துதலை முடித்து ஆர்சிபி அணி தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளது

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. இதில் பங்கேற்க 8 அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. விளையாட்டு நடத்துவதற்காக பல விதிமுறைகள் விதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றான தனிமைப்படுத்துதலை அனைத்து அணிகளும் கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் ஆர்சிபி அணி தங்களது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டது.

அதில் எந்த வீரருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில் நேற்று தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டரில் “பயிற்சி எடுத்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் வலை பயிற்சியின்போது 6 நாட்கள் மட்டுமே பயிற்சியில் இருந்து விலகி இருந்தது போல் உணரமுடிந்தது.

அணியின் வீரர்களுடன் செலவிட்ட ஒவ்வொரு நொடியும் மிகவும் சிறப்பானதாக அமைந்தது” என பதிவிட்டுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 12 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தபட்டதால் மேலும் காலதாமதம் ஆகும் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |