Categories
உலக செய்திகள்

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு… “இனி நுழைய முடியாது”… ஆப்பு வைத்த நாடு..!!

ஸ்விட்சர்லாந்துக்கு அபாயம் இல்லாத நாடுகள் வழியாக வருபவர்களுக்கும் தடைவிதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது

அதிக அளவு அபாயம் உள்ள நாடுகளில் இருந்து ஸ்விட்சர்லாந்துக்கு வருபவர்கள் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று. ஆனால் எத்தகைய புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தாலும் அதில் இருக்கும் சிறிய ஓட்டையையும் பயன்படுத்தி விதிமுறைகளில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளை தேடுபவர்கள் ஏராளமானோர். அதேபோன்று ஸ்விட்சர்லாந்துக்கு அதிகமான அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் மட்டுமே கட்டாய தனிமைப்படுத்துதல் விதி முறையை கடைபிடிக்க வேண்டும் என்பதால் சிலர் குறுக்கு வழியை கண்டறிந்தனர்.

அதாவது அதிகளவு அபாயம் இருக்கும் நாட்டிலிருந்து அபாய பட்டியலில் இல்லாத நாட்டிற்கு சென்று அங்கிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல ஒரு கூட்டம் முடிவு எடுத்தது. ஆனால் தற்போது அரசு அவர்களுக்கும் ஒரு தீர்வு செய்துள்ளது. அதாவது இந்த மாதம் மாதம் 31 ஆம் தேதியிலிருந்து அதிக அளவு அபாயம் கொண்ட நாட்டை சேர்ந்தவர்கள் அபாய நாடுகள் பட்டியலில் இடம் பெறாத நாடுகள் வழியாகவும் ஸ்விட்சர்லாந்துக்குள் நுழைய முடியாது.

அவ்வாறு அவர்கள் ஸ்விட்சர்லாந்துக்கு வந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதல் நிச்சயம் உண்டு என்பதும் கனடாவிலிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு வருபவர்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |