இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக ஐபிஎல் போட்டி வீரர்கள் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா இந்தியா திருப்பி அனுப்பப்பட்டார். இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று சென்னை அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவரின் தனிப்பட்ட காரணத்திற்காக அவர் நாடு திரும்பியதாகவும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியதற்கான முக்கிய காரணங்கள் வெளியாகியுள்ளன. அடையாளம் தெரியாத நபர் தாக்கியதில் ரெய்னாவின் மாமா உயிரிழந்ததாக உயிரிழந்ததால் அவர் அவசர அவசரமாக இந்தியா திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.