Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திரையரங்குகளை திறக்க அனுமதி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கம் திறக்க மத்திய அரசு அனுமதியை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் நாளை மறுநாளோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 30 வரை பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கு தடை தொடரும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 21 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம். செப்டம்பர் 21க்கு  பிறகு 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்.  மத்திய அரசிடம் ஆலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தக் கூடாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |